top of page

About us

about  us copy.jpg

Books are the roads that help us to reach our milestone. Many people find their life and soul in books. Reading can benefit individuals of all ages, from six to sixty. Knowledge-gain or pass-time, books are the best companions.

 

Despite technological and other advancements, many people continue to have a strong appreciation for books. If you are one of those book lovers, then Navina Mithra Publishers is the right destination for you to explore.

 

Navina Mithra Publishers is a platform for buying books online. With just a few clicks, you can conveniently purchase the book of your choice. Finding the book of your preference is also made effortless.

We have a wide array of English and Tamil books. The categories are widespread that includes novels, essays, journals... You can shop according to your chosen categories.

 

Navina Mithra Publishers offers books from various authors. The selection includes a diverse range of genres, such as politics, social justice, literature, science, and philosophy. Our book collection spans from classical to trendy. Our prices are reasonable and will always satisfy you.

 

You can come across plentiful reviews of uncounted books from various authors under one roof in Navina Mithra Publishers. We will keep you updated on book-related events worldwide. You can access many classic books which are unavailable physically for FREE.

 

The process of purchasing a book has now become easier. Visit our website (www.Navina Mithra Publishers.in), browse and select your favorite’s, pay, and we will ensure timely delivery to your doorstep.

 

We seek a synergistic partnership in which both parties mutually benefit and achieve sustained growth and prosperity.

நவீன மித்ரா….

இது பெயரல்ல… அறிவுத்தேடலின் அடையாளம்.

நவீன மித்ரா வெளியிடும் புத்தகங்கள் படிப்பவர்களுக்கு சமகால நிகழ்வுகளையும், சம்பவங்களையும் மனதில் அசைபோட வைக்கும். எண்ணற்ற எண்ணிக்கையில் புத்தகங்களை வாசகர்களுக்கு தருவதைவிட சொல்லும்படியான தலைப்புகளில் இன்றைய தலைமுறையினர் அறிய வாழ்வியல் நடைமுறைகளை பதியச் செய்வதன் முயற்சியே எங்கள் நோக்கமாகும்.

புத்தகங்கள் நல்ல நண்பனாக என்றும் நம்மை தொடரும்.

நீங்கள் எழுதி வைத்துள்ள தொகுப்புகளை புத்தகமாக்க வேண்டுமா? எங்களின் நவீன மித்ரா பப்ளிகேஷனுக்கு வாருங்கள். உங்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு வியக்கத்தக்க வகையில் , குறைந்த செலவில் உங்கள் எழுத்துக்கள் புத்தக வடிவில் வாசகர்களுக்கு சென்றடைய வழி அமைத்து தருகிறோம். உங்களின் அனைத்து தேடல்களும் ஒரே இடத்தில் நிறைவடையும்.

படிப்பதில் , படித்ததில் எவை நம்மை வழிநடத்திச்செல்லும் என்பதை நல்ல படைப்புகள் மட்டுமே சொல்லும்.  எங்கள் நவீன மித்ராவும் திறமையான எழுத்தாளர்களை கொண்டு புத்தகங்கள் தருவதே நோக்கமாகும். அதன்படியே எழுத்தாளர்களூம் தங்கள் எழுத்துக்களில் நிரூபணம் செய்து வருகிறார்கள்.

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் தடங்களில் வாசகர்களிடம் சேர்க்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் புத்தகங்கள் வீட்டிற்கே வந்து உங்கள் கைகளில் தவழ, நீங்கள் ஆர்டர் செய்தவுடன் மிக விரைவாக உங்களிடம் சேர்க்க முற்படுவதே எங்களின் பிரதான நோக்கமாகும்.

புதிய முயற்சிகளுக்கு பெருமளவு ஆதரவு தந்து வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும் வாசகர்களுடன் கரம் கோர்த்து நவீன மித்ராவும் தனது பதிப்பக பயணத்தை தொடங்கியுள்ளது.

எங்கள் படைப்புகளை நீங்கள் கொண்டாடி மகிழ்வது போல் தங்களுக்கு தெரிந்தவர்களும், அறிந்தவர்களும் கொண்டாடி மகிழ்ந்திட குழுவாகவும், அதிலிருந்து மேலும் பல குழுக்கள் உருவாகவும் வாசகர்களாக மட்டுமில்லாமல் தோழமையுடன் கரம் கோர்க்க அன்புடன் அழைக்கிறோம்.

புத்தகங்களுக்கான விலைகள் வாசகர்கள் ஏற்கும்  வண்ணமே இருக்கும். ஒவ்வொரு முறையும் தாங்கள் வாங்கும் புத்தகங்களுக்கு கணிசமான விலை தள்ளுபடியும், உங்களால் மற்றவர்கள் வாங்கும்போதும் அவர்களும் மகிழ்ச்சியில் திளைக்க விசேஷ தள்ளுபடியும் நவீன மித்ரா வெளியீடுகளுக்கு கிடைக்கும் நல்லதொரு அனுபவத்தை வாசகர்களுக்கு கட்டாயம் தரும்.

எங்களின் நோக்கம் நல்ல பொது தலைப்புகளையும், மாணவர்களுக்கு பயன் தரும் படைப்புகளையும் தொடர்ந்து புத்தக வழியே தரவேண்டும் என்பதும், அதன் மூலம் தமது புத்தக பயணத்தின் அறிவுசார் தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும் என்பதுவுமே ஆகும்.

வாசகர்களின் வாழ்த்துகளுடன் …. தனது புத்தக பயணத்தை தொடர்கிறது உங்கள் நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்.

bottom of page