Books Reviews


நலம் சொல்லும் யோகாவும் முத்திரைகளும்
நன்றி : தினத்தந்தி

அமர்ந்த நிலையிலும் , நின்ற நிலையிலும், படுத்த நிலையிலும் செய்யக்கூடிய 40 வகையான ஆசனங்களின் செய்முறைகள் பட விளக்கத்துடன் விவரிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் திருமந்திரத்தில் கூறியபடி கடைபிடிக்க வேண்டிய மூச்சுப் பயிற்சி , தூக்கமினமையை போக்குவதற்கும் , சிறுநீரகம் பாதிப்பு இல்லாமல் செயல்படவும், தைராய்டு பிரச்னி நீங்கவும் உதவும் முத்திரைகளைச் செய்யும் விவரமும் , அதனால் கிடைக்கும் பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. செய்முறை பயிற்சிகள் அனைத்தும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளன.

மகளிரும் மகப்பேறும்
நன்றி : தினமலர்

பெண்ணுக்கு ஏற்படும் மாற்றங்களை மருத்துவ ரீதியாக விவரிக்கும் நூல். குழந்தை பிறப்பு பருவம் முதல் பூப்படைவது, குழந்தை பெறுவது , வளர்ப்பது என எல்லா நிலைகளிலும் ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைக்கிறது. அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகளை மருத்துவ அறிவியலுடன் எடுத்துரைக்கிறது. புத்தகத்தில் வண்ணப்படங்கள் பெண்ணின் பிரச்னையை புரிந்து கொள்ள துணை செய்யும் விதமாக உள்ளன. மருத்துவரை உதவிக்கு அழைக்கும் பெண் கேட்கும் வினாக்கள் அனைத்திற்கும், விடைகள் அடங்கி இருக்கின்றன. ஒரு குடும்ப மருத்துவர் போல் துணை நிற்கிறது. உணவு முறையில் கடைபிடிக்க வேண்டிய விதிகளையும் வகுத்து தருகிறது. பெண்கள் உடல் நலம் பேண உதவும் கையேடு நூல்.

மகளிரும் மகப்பேறும்
நன்றி : தினத்தந்தி

பிறந்தது முதல் 24 வரையிலான பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகள் அவௌ ஏற்படாமல் தடுப்பது எப்படி, அவற்றுக்கு எந்த மாதிரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பவை தொடர்பாக விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இளம் பருவப் பெண்களுக்கான தடுப்பூசிகள் , புற்றுநோய் தடுப்புக்கான ஊசி, வளரும் வயதில் உள்ள பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் உணவுவகைகள், ஆகிய விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் , பாலியல் வன் கொடுமைக்கு எதிரான சட்ட விவரங்கள், தற்கொலை எண்ணத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதும், பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களை விளக்கும் கேள்வி பதில் பகுதியும் இந்த நூலில் காணப்படுகின்றன.

நம்ம வீட்டு டாக்டர்
நன்றி : இந்து தமிழ் திசை

நமது உடலை நோயின்றிப் பராமரிப்பது எப்படி? என்பதை இந்த நூல் நமக்கு விளக்குகிறது. நமது பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் நமக்கு நினைவுப்படுத்துகிறது.


சாதனை படைத்த சரித்திர நாயகர்கள்.
நன்றி : தினத்தந்தி

உலக வரலாற்றில் சாதனை நாயகர்களாகக் கொண்டாடப்படும் அலெக்சாண்டர், நெப்போலியன், அசோகர் ஆகியோரின் வாழ்க்கை விவரிக்கப்பட்டு உள்ளது. இதில் பெருமளவு கற்பனை நிகழ்வுகளைக் கலக்காமல் அதே சமயம் புறட்டுச் செய்திகளாக இல்லாமல் ஒரு நாவலைப் போல் அமைத்துக் கொடுத்து இருப்பது சிறப்பு,, கடந்த காலங்களில் உண்மையாக நடமாடியவர்களின் உரையாடல்கள் இப்படித்தான் இருந்திருக்கும் என்ற அனுமானத்துடன் சொல்லி இருப்பது இந்த வரலாற்று நூலை ரசித்து படிக்க உதவுகிறது. அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்த பிறது மரணத்தை சந்தித்தது, நெப்போலியன் எகிப்தை கைப்பற்றியது,

சிந்தனையும் செயலும்
நன்றி : அந்திமழை

மு.கருணாநிதியின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கபட்ட பிரகு அவரது படைப்புகளை பலரும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சிந்தனையும் செயலும் காலப்பேழையும், கவிதைச்சாவியும் ஆகிய இரு படைப்புகளையும் உள்ளடக்கி ஒரே நூலாக வெளியிட்டுள்ளனர். நவீன மித்ரா பதிப்பகத்தினர். நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக தூரம் தாண்ட முடியும் என்கிற பழமொழியைத் தனக்கு மிகவும் பிடித்தமானது எஙிற கலைஞர் உழைப்பின் முக்கியதுவத்தை இதிலுள்ள கட்டுரையொன்றில் வலியுறுத்துகிறார். நாராயண நமஹ என்று சொல்லி தியானம் செய்யுங்கள் என யோக ஆசிரியர் சொல்ல, ஞாயிறு போற்றுதும் என்ற சிலப்பதிகார வரியைச் சொல்லி தான் தியானம் செய்வதாகவும் கூறும் கட்டுரையும் முக்கியமான ஒன்று, இவ்வாறு வாழ்வியலும் இலக்கியமும் பேசும் கட்டுரைகள் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் கற்காலத்தில் இருந்து தமிழினத்தின் வரலாற்றை கவிதை நடையில் சொல்கிற காலப்பேழையும் கவிதைச் சாவியும் என்கிற தொகுப்பும் இந்நூலில் உள்ளது அவரது வாசிப்புத் திறனுக்கும் எழுத்துத் திறனுக்கும் இப்படைப்புகள் சிறந்த சான்றுகள். இவ்விரண்டு நூல்களுமே இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னால் எழுதப்பட்ட கலைஞரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் எனலாம்,. அழகான கட்டமைப்பில் வெளியாகி இருக்கும் நூல் இது.

சிந்தனையும் செயலும்
நன்றி : தினத்தந்தி

முததமிழறிஞர் கலைஞர் கருணாநிதி எழுதிய கட்டுரைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அரசியலை தூய்மையாக்க என்ன செய்ய வேண்டும் , ஜனநாயகத்தின் மதத்துவம் ஜோதிடர்களால் ஏற்படும் விபரீதங்கள், தீவிரவாதத்த்ற்கு தீர்வு, மகளிருக்கான இட ஒதுக்கீட்டின் அவசியம் , அருத குட்டி நாடார், என்ற கவிராயாரின் சிறப்பு ஆகியவை நூலின் முன்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் வசன நடைக்கவிதைகள் நிரம்பி இருக்கின்றன. கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவாக வைக்கபடவேண்டும். மாயா, மெக்ஸிகோ நாகரீகங்கலின் தாயாக வழங்குவது திராவிட நாகரீகமே என்பது போன்ற கருத்துகல், பழங்கால தமிழ் மன்னர்களான நெடுஞ்சேரலாதன், சேரன் செஙுட்டுவன், கரிகாலன், இளஞ்சேட் சென்னி, ராஜராஜன், ராஜேந்திர சோழன் உள்ளிட்டவர்களின் சிறப்பு 2000 அண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் நாகரீகம் போன்றவற்றைப் பற்றிய கவிதை வரிகள், அரிய தகவல்களைத் தருவதுடன் கருணாநிதியின் இலக்கியப் புலமைக்குச் சான்றாகவும் திகழ்கின்றன.

சாதனை படைத்த சரித்திர நாயகர்கள்
நன்றி : தினமலர்

உலகின் மூன்று மாவீரர்களின் வாழ்க்கை வரலாற்றை , தக்க படங்களுடன் விவரிக்கும் நூல். கிரேக்கத்தில் பிறந்து இந்தியா வரை வந்த மாவீரன் அலெக்சாண்டர் , உலகின் பெரும் பகுதியை ஆட்கொண்டான். பஞ்சாப் பகுதி மன்னன் போரஸின் வீரத்தைப் போற்றி , வென்ற நாட்டின் பகுதியை விட்டுக் கொடுத்தான்.
வரலாற்றில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படும் மன்னன் நெப்போலியன், ராணுவ அகாடமி ஊக்கத்தொகையில் படித்து உலகம் போற்றும் மாவிரனாய் மாறியதை விவரிக்கிறது. பேரரசர் அசோகர், வெறி கொண்டு வெற்றி பெற்றதும், ஒரே வினாடியில் அதை துறந்து, பவுத்தம் தழுவியதையும் தெளிவாக சொல்கிறது. மூன்றுமே கட்டுரைகள் என்றாலும் குறுங்கதைகள் போல் எளிமையாக உள்ளன. வரலாற்றை கதையாக கூறும் நூல்.

ஈழப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு
நன்றி : தினத்தந்தி

இலங்கையில் தமிழ் ஈழம் அமைய, தொடக்க காலம் முதல் நடைபெற்ற முன்னெடுப்புகளும், போராட்டங்களும் விரிவான அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்ந்த போது பணிரெண்டாம் நூற்றாண்டில் தமிழர்கள் வசித்த் நகரங்களின் பெயர்களை சிங்கள மொழி பெயர்களாக மாற்றியதால் முதல் முறையாக பிரிவினை எண்ணம் தோன்றியது என்பது கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆதிகால வரலாறு , ஆட்சி செய்த மன்னர்களின் விவரம் , ஆங்கிலேயரின் வருகையால் ஏற்பட்ட பாதிப்புகள் தோட்ட வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள், 1970 ம் ஆண்டு புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது தமிழர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை தமிழ் இளைஞர்கள் கையில் 1972ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தை தமிழ் இளைஞர்கள் கையில் எடுத்தது, 1974ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டின்போது சிங்களவர்கள் நடத்திய அட்டூழியம் ஆகிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தொடங்கிய பிரபாகரனின் செயல்பாடுகள், ஈழப்போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் போற்றிய சகலகலாவல்லி
நன்றி : தினத்தந்தி

மக்கள் போற்றிய சகலகலாவல்லி, வியக்க வைக்கும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நூல்கள் ஒன்றாக ஆக்கி தரப்பட்டு இருக்கின்றன. நடிகை பானுமதியை நடிகை பானுமதியை சகலகலாவல்லி என கொண்டாடும் புத்தகத்தில் பானுமதி வேண்டா வெறுப்பாக சினிமாவில் நடிக்க வந்தது , நடிக்கும்போது கதாநாயகருடன் கட்டிப்பிடித்து நெருங்கி நடிக்க மாட்டேன் என்ற நிபந்தனையை இறுதிவரை கறாராக கடைபிடித்தது , ஜோதிடம் பார்க்கும் திறமை கொண்ட அவர், ஒருநாள் ஜோதிடம் பார்ப்பதை திடீரென்று நிறுத்தியது ஏன் என்பவை உள்பட அவரது வாழ்வில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் அனைத்தும் ஆர்வத்துடன் படிக்கும் வகையில் தரப்பட்டுள்ளன. நூலின் மற்றொரு பகுதியில் சாதாரண கிராமம் போல இருந்த சிங்கப்பூரின் வரலாறும் வியக்கத்தக்க வகையில் அந்த நாடு முன்னேறியது எப்படி என்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

சுதந்திர நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு
நன்றி : இந்து தமிழ் திசை

பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்குப் பிறகு இந்தியாவைச் செதுக்கிய சிற்பியான நேருவைப் பற்றிய நூல் இது. அந்தக் காலகட்டத்தின் பல தகவல்களை இந்த நூல் தொகுத்துள்ளது.