top of page

நூல் குறிப்பு
வளர் இளம்பருவத்தில் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளை பெண்களும் பெற்றோர்களும் புரிந்து கொண்டு தங்கள் பெண் குழந்தையை சரியாக பராமரிக்க வேண்டும். இவள் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு போதுமான அளவு தயாராகாமல் போகலாம். மோசமான உடல் நிலையில் முதிர் வயதுக்குள் நுழையும் இவளால் பிற்காலத்தில் கர்ப்பம் தொடர்பான சிக்கல்களும், இருதய கோளாறுகளும், தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய இயலாமல் போவதும் ஏற்படலாம். வளர இளம் பருவப் பெண்களின் ஊட்டச்சத்து மிக முக்கியம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல் இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது ஆண் மற்றும் பெண் இரு பாலரிடமும் அதிகமாக காணப்படுகின்றது. உடல் பருமனால் பிற்காலத்தில் பல வகையான ஆபத்துகள் ஏற்படலாம். ஆரோக்கியமான எடை, மகிழ்ச்சியான இளமை என்ற இந்த புத்தகத்தின் மூலமாக ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவு உட்கொள்வதன் முறைகளும், உடல் பருமனை தவிர்க்க உடற்பயிற்சி மற்றும் மருத்துவ உதவிகளைப் பற்றியும் விரிவாக கொடுத்துள்ளேன்.
ஊட்டச்சத்து, உடல் பருமன் குறித்து அநேக வல்லுனர்கள் எழுதியுள்ள நூல்கள் இருப்பினும், பொதுவாகவும், மருத்துவ ரீதியாகவும், ஒரு முழுமையான அணுகுமுறையை மனதில் கொண்டு இந்தப் பிரச்சனைகளை அணுகி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளேன்.
 

ஆரோக்கியமான எடை மகிழ்ச்சியான இளமை

₹100.00Price
Quantity
  • Book Specifications

    Auther: Dr. விஜயலட்சுமி ஞானசேகரன்

    ISBN : 978-93-49326-36-1

    Pages : 58
    Edition: 1
    Year: 2026
    Language: Tamil
    Publisher: Navina Mithra

bottom of page