போக்சோ மற்றும் நிர்பயா சட்டங்கள் பற்றிய ஒரு புரிதல்
நூல் குறிப்பு
இந்தியாவில் சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தினமும் நடந்துகொண்டிருக்கின்றன. இச்செய்திகள் நம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் தொடர்ந்து காணப்படுவது ஒரு வழக்காகிவிட்டது. இச்செயல்கள் மனித இனம்அவமானம் கொள்ள வேண்டியவை. சூழ்நிலையின்தீவிரத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம் குழந்தைகள், ஆண், பெண் இருபாலருக்கும் இது குறித்த நன்னடத்தை,சமூகச்சீர்கேடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
இதனை முன்னிறுத்தியே நான் பாலியல் வன்கொடுமை பற்றியும், பெண்களை காப்பதற்கான போக்சோ மற்றும் நிர்பயா சட்டங்களை பற்றியும், மேலும் இளம்பருவப்பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும், பெற்றோரின் பங்கு மற்றும் கடமை குறித்து "பெண்களின் பாதுகாப்பு, தேசத்தின் பொறுப்பு" என்ற தலைப்பில் இப்புத்தகத்தை இந்த சமூகத்திற்கு அர்ப்பணித்துள்ளேன். தாங்கள் படித்து பயன்பெறவும், மற்றோருக்கு பகிரவும்.
பெண்களின் பாதுகாப்பு தேசத்தின் பொறுப்பு
Book Specifications
Auther: Dr. விஜயலட்சுமி ஞானசேகரன்
ISBN : 978-93-49326-43-9
Pages : 44
Edition: 1
Year: 2026
Language: Tamil
Publisher: Navina Mithra

