மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் சுகாதாரத்திற்கான எளிய வழிகாட்டி
நூல் குறிப்பு
மாதவிடாய் காலத்தில் மிகுந்த வலி, அதிக இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், பிசிஓஎஸ் போன்ற மாதவிடாய் பிரச்சனைகள் உடலியல் காரணிகள், மன அழுத்தம், வாழ்க்கை முறை மற்றும் மகளிர் மருத்துவ நோய்களிலிருந்து ஏற்படலாம். இந்த பொதுவான பிரச்சனைகளை இளம் பெண்கள் பருவமடைந்த உடனேயே எதிர்கொள்கின்றனர். இது வீட்டில் உள்ள பெற்றோருக்கும் பெரியவர்களுக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.
ஒரு பெண் தன்னை நோயிலிருந்து (சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், யோனி அழற்சி, இடுப்பு அழற்சி, எதிர்காலத்தில் குழந்தையின்மை, புற்றுநோய் போன்றவை) பாதுகாத்துக் கொள்ள மாதவிடாய் சுகாதாரம் மிகவும் முக்கியமானதாகும். அது கண்ணியம், ஆரோக்கியம் மற்றும் பள்ளி / வேலைக்குச் செல்வதற்கு அவசியமான நல்ல சுகாதாரத்துடன் கூடிய வசதியை உறுதி செய்வதற்கான பாதுகாப்பான நடைமுறைகளை உள்ளடக்கியது.
மாதவிடாய் குறித்து நிறைய சந்தேகங்கள் பெண்களிடையேயும், பெற்றோர்களிடையும் ஏற்படும், அதற்கு மிகவும் எளிமையான தீர்வுகளை 'மாதவிடாய் ஆரோக்கியம் முக்கியம், மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் சுகாதாரம் குறித்த ஒரு எளிய வழிகாட்டி' என்ற இந்த நூல் விளக்குகின்றது. இளம் பெண்கள், பெற்றோர் ஆகிய இருவரும் படித்து பயன் பெற இது உதவுகின்றது. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
மாதவிடாய் ஆரோக்கியம் முக்கியம்
Book Specifications
Auther: Dr. விஜயலட்சுமி ஞானசேகரன்
ISBN : 978-93-49326-14-2
Pages : 44
Edition: 1
Year: 2026
Language: Tamil
Publisher: Navina Mithra

