top of page

"வள்ளலார் கண்ட தருமச்சாலை" என்னும் இந்நூலை நான் எழுதுவதற்கு காரணம் வள்ளலார் மீதுகொண்ட நாட்டத்தினால் மட்டுமல்ல. பசியினால் ஏற்பட்ட வாட்டத்தினாலும்தான். பசியினால் ஏற்படும் துன்பங்கள் எப்படி இருக்கும் என்பதை பட்டியலிட்டு கூறுவார் வள்ளல் பெருமான். அப்பட்டியலில் உள்ள அனைத்து பசித்துன்பங்களையும் பார்த்தவன் நான். எனக்கு முன்னால் இறைவன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் "எனக்கு இரண்டு வரம் வேண்டும்” என்று கேட்பேன். "ஒன்று, எனக்கு சோறு போட்ட எல்லோர்க்குமே சொர்க்கத்தில் இடம் கொடு" என்று கேட்பேன். இரண்டாவது, “நான் இறக்கும் நாளிலாவது எனக்கு மூன்று வேளை உணவு கொடு" என்று கேட்பேன். இருந்த நாட்களில்தான் கிடைக்கவில்லை. இறக்கும் நாளிலாவது கிடைக்கட்டும். சாகும் நாளிலாவது மூன்று வேளை உணவு உண்ண வேண்டும் என்பதே என் பெருங்கனவு. இந்த இருவரங்களே இறைவனிடம் எதிர்பார்ப்பவை. உங்களுக்கு இது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அதன் பின் உள்ள வேதனைகள் எனக்கு மட்டுமே தெரியும்.

வள்ளலார் கண்ட தருமச்சாலை

₹275.00Price
Quantity
  • Book Specifications

    Auther: A.T.Pagalan

    ISBN : 978-93-49326-71-2

    Pages : 316
    Edition: 1
    Year: 2025
    Language: Tamil
    Publisher: Navina Mithra

bottom of page